Monday, June 15, 2009

ஆசைகளே அதன் காரணங்கள்.....!!!

From: vishalam raman
Date: Sun, 14 Jun 2009 14:53:51 +0530


குறைந்த சுமை நிறைந்த வாழ்க்கை

வாழ்க்கை எனும் ரயில் பாரு
குறைந்த சுமையுடன் அதில் ஏறு
அதிக சுமைகள் அங்கு தாங்காது ,
உள்ளே இடமும் போதாது .
சுமைகள் பத்திரமாய் காத்தல்
வரும் மனதில் உளைச்சல் .
சுமைகளால் வரும் பிரச்சனைகள்,
ஆசைகளே அதன் காரணங்கள் .
இலேசான சுமைகள் தூக்கவது சுலபம்
சுமைகள் இல்லையெனில் அதைவிட லாபம்
பந்தபாசச்சுமை கனத்த எடை ,
மேலே ஏற அது ஒரு தடை ,
பேராசை சுமைகளை வளர்க்கும்
ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
மனசுமைகள் இறக்க வேண்டும் ஒரு கூலிக்காரன்
ஆன்மீக நிலையத்தில் நிற்கும் ஒரு கூலிக்காரன்
கூப்பிட்டவுடன் நம் முன் தோன்றுவான்
நம் சுமையை அவன் தாங்குவான்
அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி
பெறுவோம் நாம் முழு நிம்மதி ,
நம்பிக்கையுடன் சுமையைக் கொடுப்போம்
நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .

2 comments:

  1. Dear Sir,

    It is a good article for all people. very nice. less desire less problems. ok.

    Thank u for ur advice

    Yr
    D.Balasankar

    ReplyDelete